இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 121 பிரிகேட் மற்றும் 12 வது பிரிவின் கீழ் உள்ள 20 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் வியாழக்கிழமை (06) தனமல்வில வத்தேஹேரியகந்த பிரதேசத்தில் கஞ்சா செய்கை முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்டன.
சுமார் 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட சட்டவிரோதமான சுமார் 3 லட்சம் ரூபாய் பெருமதியான இக் கஞ்சா செடிகள் காடுகளுக்குள் ரகசியமாக வளர்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரின் மேற்பார்வையில் படையினரால் அனைத்து செடிகளும் அழிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கையானது 121 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டி.யு.என். சேரசிங்க மற்றும் 20 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையின் கீ்ழ் படையினரால் மேற்கொள்ளப்பட்டது.
நாட்டில் இருந்து போதைப்பொருள் ஒழிப்பதை கருத்திற் கொண்டு ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமைய தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா மற்றும் 12 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்கவின் வழிக்காட்டலின் கீழ் படையினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.