கல்கிஸ்சை பிரதேசத்தில் அண்மையில் சுழியோடி ஒருவரை தாக்கிய பிணம் தின்னும் முதலை நேற்றைய தினம் கொழும்பு துறைமுக நகர கடற்கரைக்கு வந்துள்ளது. முதலை கடற்கரைக்கு வந்து இருந்தமையை காட்டும் புகைப்படங்களுக்கும் வெளியாகியுள்ளன.
இந்த முதலையை அங்கிருந்து விரட்டும் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடலில் அவ்வப்போது காணப்படும் இந்த முதலை மனிதர்களை தாக்கும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கல்கிஸ்சை, தெஹிவளை கடற்பகுதியில் அண்மையில் வண்ண மீன்களை பிடிக்கும் சுழியோடியை இந்த முதலை தாக்கியதுடன் சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்