கொழும்பு – வெள்ளவத்தை கடலில் தலையில்லா சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று காலை கரையொதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலை இல்லாது காணப்படும் இந்த சடலம், முழுமையாக உருகுலைந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
ஆண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதுடன், குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்