மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்புடன் செயல்படக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படும் எனினும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். தேவையற்ற விஷயங்களில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் தீரும். உத்யோகஸ்தர்கள் தங்கள் பணியில் கூடுதல் பொறுப்புடன் செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்து வந்த மன கசப்புகள் தீரும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சலுகைகள் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்கும். பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொலை தூரப் பயணங்களை மேற் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தட்டிச்சென்ற ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நேர்மறையான எண்ணம் கொண்டு செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் எதிர்பாராத நண்பர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த ஒற்றுமையில் குறைவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொழில் விரிவாக்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். உத்யோகஸ்தர்கள் தங்கள் மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக செல்வது நல்லது.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துடிப்புடன் செயல்பட கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. மற்றவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். உத்யோகஸ்தர்கள் எதிலும் ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கும். சுயதொழில் எதிர்பார்க்கும் லாபம் பெருகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சுறுசுறுப்பான சூழ்நிலை காணப்படும். எதையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத வகையில் எதிர்ப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். வெளியிடங்களில் தேவையற்ற விஷயங்களில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும், வாடிக்கையாளரின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதுக்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து மோதல்களை தவிர்ப்பது நல்லது. சிறு தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையான இடங்களில் மௌனம் காப்பது உத்தமம். உத்யோகஸ்தர்கள் தங்கள் சக பணியாளர்களுடன் இருந்து வந்த பகைமையை விலக்கிக் கொள்வீர்கள்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கி ஆதரவு கிடைக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பணிகளில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. ஆரோக்கியத்தில் இருந்த வந்த குறைகள் நீங்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு திடீர் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய நினைவுகள் வந்து செல்லும். கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் அனுகூல பலன் தரும். ஆரோக்கியம் கவனம் தேவை.