மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதற்கும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். தேவையற்ற நபர்களின் அறிமுகம் தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களின் மூலம் அனுகூல பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் சிறப்பாக செயலாற்றி பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற கடன் வாங்கும் எண்ணம் தவிர்த்து செயல்படுவது நல்லது. கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி சுமை அதிகரிக்கும் என்பதால் டென்ஷன் காணப்படும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் இருக்கும். வர வேண்டிய இடங்களில் இருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். சுயதொழில் செய்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனை ஆகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. மனதில் இருக்கும் விஷயங்களை மூடி மறைக்காமல் கொட்டி விடுவது நல்லது. சுய தொழிலில் எதிர்பார்க்கும் வருமானம் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தின் மீது அக்கறை அதிகரிக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொலை தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி நிமித்தம் காரணமாக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும். கணவன் மனைவி உறவில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். ஆரோக்கியத்தின் மீது அக்கறை கூடுதலாக இருப்பது நல்லது.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் வேகம் விவேகம் அல்ல என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத திடீர் பயணங்கள் அதிர்ஷ்டம் தரும். பெண்கள் வெளியிடங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் மாற்றம் குழப்பத்தை ஏற்படுத்தும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தவறவிட்ட ஒப்பந்தங்கள் திரும்ப கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்து புத்திக் கூர்மையுடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து மோதல்கள் உருவாக வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நலம் தரும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது நடக்க காலதாமதம் ஆகலாம் எனினும் பொறுமை காப்பது நல்லது. மூன்றாம் மனிதர்களைப் பற்றிய அலசல்களை தவிர்ப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட கூடிய அமைப்பாக இருக்கிறது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்ப்பது உத்தமம். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல மதிப்பு உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை வலுவாகும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாய் கூடுமானவரை சிக்கனம் மேற்கொள்வது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். தியானம் யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்ப்பது உத்தமம். கணவன் மனைவியிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பொருளாதாரம் மேம்படும்.