தாய்வான், கருங்கடல், உக்ரேன், தென்சீனக் கடல், இந்திய-சீன எல்லைகள், ஈரான், இஸ்ரேல் என்று இந்த பூமியின் பல இடங்களில் யுத்த மேகங்கள் சூழ்ந்து மிகப் பெரிய யுத்தங்கள் ஏற்படுவதற்கான சமிஞ்ஞைகள் நீண்ட காலமாகவே காணப்பட்டு வருகின்றன.
ஆனால் பலராலும் அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருகின்ற அந்த யுத்தங்கள் இதுவரை ஏற்படவில்லை.
ஏன்?
கருமையான யுத்த மேகங்கள் சூழ்ந்து வருகின்ற இந்த இடங்களிலெல்லாம் எப்பொழுது போர் வெடிக்கும்?
போருக்கான அறைகூவல்கள் விடுத்துள்ள அத்தனை தேசங்களும் எதற்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன?
போர்ப் பதற்றம் நிலவிவருகின்ற இடங்களில் சமாதானம் ஏற்பட சாத்தியம் இருக்கின்றதா?
இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுகின்றது இன்றைய ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: