இன்றையதினம் மட்டக்களப்பு வின்சென்ற் தேசிய பாடசாலை 2ம்ஆண்டு மாணவிகளை சேர்ப்பதற்காக கல்லூரி விடுகைப் பத்திரம், பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், பாடசாலைக் கட்டணம் போன்ற ஆவணங்களுடன் வருமாறு எழுத்து மூலமாக குறித்த பாடசாலை அறிவித்தல் விடுத்த்ததாக கூறப்படுகின்றது.
எனினும் அதன் பின்னர் குறித்த பாடசாலை கதவு முடப்பட்டதாகவும் மாணவிகளை சேர்க்க வேண்டாம் என்று வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்ததாகக் கூறி மாணவிகளையும் பெற்றோரையும் படசாலை சமூகத்தினர் அலைய விட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக அபிவிரித்திக் குழுத் தலைவர் கௌரவ பிள்ளையான் அவர்களிடம் சென்றபோது அவர் தொலைபேசி மூலம் வலயக் கல்விப் பணிப்பாளர் கதைத்து விட்டுசெய்ய முடியாது என்று மறுத்து விட பெற்றோர் மனித உரிமை ஆணையகத்தை நாடியுள்ளனர்.
அதேவேளை அவர்களுக்கும் எங்கள் விடயத்தில் தலையிட வேண்டாம் என்று அதிகாரத் தொனியில் கூறியதாக பெற்றோர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளைக்குள் மாணவிகள் பாடசாலையில் சேர்க்கப்படா விட்டால் அடிப்படை உரிமை மீறலுக்காக வழக்குத் தொடரப்படும் என பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.
சிரேஸ்ர சட்டத்தரணி பிரேம்நாத்தின் (Perinpam Premnath) அடிப்படை உரிமையின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அதிபருடன் அவரும் பெற்றோரது நிலைப்பாட்டைத் தெரியப்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப் போவாதாகத் தெரியப்படுத்தியிருந்தார்.
அதிர்ச்சி அடைந்த பாடசாலை நிர்வாகம் பாதிக்கப்பட்ட 21 மாணவியர்களும் இன்று பாடசாலையில் சேர்க்கப்பட்டனர் என பாதிக்கப் பட்ட தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது