கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சேனநாயக்க மாவத்தையில் உள்ள நெல் களஞ்சியசாலை பகுதியில் இரண்டு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகளை கண்டெடுத்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று (29) விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால்க குறித்த கைக்குண்டுகள் செயலிழக்கச் செய்யப்படும் என கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.