பிரபல திரைப்பட நடிகையான டாப்ஸி வருமான வரித்துறை சோதனையின் போது தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கூறியுள்ளார்.தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படம் மூலம் அறிமுகமான டாப்ஸி அதன் பின், தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் நடித்து பிரபல நடிகையானார்.
தற்போது இவர் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் நடிகை டாப்ஸி மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகிய இருவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.இவர்கள் இருவரும், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் தான் இருவரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடப்பதாக கூறப்பட்டது.
இதையடுத்து, தன்னுடைய வீட்டில் நடந்த வருமான வரி சோதனை குறித்து டாப்ஸி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், வருமான வரி சோதனை குறித்து எனக்கு எந்தவித கவலையும் இல்லை.
எனக்கு சொந்தமான பாரிஸீல் உள்ள வீட்டுக்கான சாவிகள் மற்றும் நான் நிராகரித்த 5 கோடி ரூபாய் காசோலையை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றது மட்டுமே இந்த சோதனையால் எனக்கு ஏற்பட்ட பாதிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.