நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு பிறப்புடன் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் ஒன்று கூடும் மக்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும், பொது மக்கள் அதிகமாக ஒன்று கூடுகின்ற இடங்கள் மற்றும் பிரதேசங்களில் விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும், முடிச்சுமாறிகள் (Pickpocket) மற்றும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துமாறும் அவர் அறிவித்துள்ளார்.
அத்துடன், மோட்டார் சைக்கிள் மூலம் கண்காணிக்குமாறும் ரோந்துகளை நடைமுறைப்படுத்துமாறும் அமைச்சர், பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.