மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பகுதியிலுள்ள வீடு ஒன்றில் வைத்து கொடூரமாக கொலைசெய்யப்பட்ட பெண்ணின் சடலம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற ஏ.சி.றிஸ்வானின் விசாரணையை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இன்று(திங்கட்கிழமை) மாலை மட்டக்களப்பு அரசடி, பார்வீதியில் உள்ள வீடு ஒன்றில் தந்தையும் மகளும் இணைந்து பெண்னொருவரை கொடூரமாக வெட்டி கொலை செய்ததுடன் அவர்கள் அணிந்திருந்த நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
குறித்த தந்தையும் மகளும் வீதியில் இரத்த கறையுடன் செல்வதை அவதானித்த முச்சக்கர வண்டி சாரதியொருவர் இருவரையும் துரத்திச்சென்று சோதனை செய்தபோது இரத்தம் தோய்ந்த நகைகளும் தோடுகளுடன் இரு காதுகளும் பையொன்றில் இடப்பட்டுள்ளதை கண்டு இருவரையும் பிடித்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் குறித்த கொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பகுதியில் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட பெண்ணின் சடலம்
No Comments1 Min Read

