பிலிமத்தலாவவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் மின்தூக்கி (LIFT) இயந்திரம் அறுந்து வீழ்ந்ததில் 26 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெகித, பலன பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மற்றுமொரு பெண் பேராதனை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மூன்றாவது மாடியில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்த போது மின்தூக்கி (LIFT) இயந்திரம் அறுந்து வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கடுகன்னாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.