மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பணவரவு சிறப்பாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சுய தொழிலில் ஏற்றம் காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பாதைகள் தென்படும். நண்பர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் ராசிக்கு ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டு. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அதிகம் பொறுமை தேவை. பணம் கிடைக்க வேண்டிய இடத்திலிருந்து கிடைக்குமா? என்கிற கேள்வி எழும். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை கவனம் தேவை. ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் எதிலும் உங்களுக்கு ஜெயம் உண்டாகும். தடைப்பட்ட சுப காரியத்தில் வெற்றி யோகம் உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழிலில் நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை. ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைத் கொடுக்கக்கூடிய வகையில் அமைய இருக்கிறது. இழுபறியில் இருந்த சில விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். சுய தொழிலில் இருப்பவர்கள் வெளியிட பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதி தேவை. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அதிரடியான சில முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மேலும் வளராமல் இருக்க கூடுமானவரை பொறுமையுடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். சுய தொழிலில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். ஆரோக்கியம் கவனம் தேவை.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரக்கூடிய அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மூன்றாம் நபர்களிடமிருந்து எச்சரிக்கை தேவை.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் துடுக்கு தனமாக செய்து வம்பில் மாட்டிக் கொள்ள வாய்ப்புகள் இருப்பதால் அமைதியுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தீரா பழி ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. சுய தொழிலில் லாபம் காணலாம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நம்பி வந்த சில பொறுப்புகளை சரியாக செய்து முடிக்கும் எண்ணம் இருக்கும். உங்கள் முகத்தை புது பொலிவு உண்டாகும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுடைய ஆலோசனை தேவை. செய்ய முடிவு எடுப்பது அவ்வளவு நல்லதல்ல. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பழைய வேலைகள் கூட முடிக்கக் கூடிய வகையிலான அமைப்பு உண்டு. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் உங்களுக்கு உள்ளத்தில் நிம்மதி ஏற்படும். அக்கம்பக்கத்தினர் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பெண்களுக்கு பொறுமை தேவை. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய யுக்திகளை கையாளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமை உணர்வு அதிகரித்து காணப்படும். ஆரோக்கியம் மேம்படும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் ஏற்ற இறக்கமான சூழ் நிலை காணப்படுவதால் ஆரோக்கிய ரீதியாக அக்கறை கூடுதலாகத் தேவை. உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது பல்வேறு பிரச்சினைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் வலுவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தொடர் சறுக்கல்களை சந்தித்தாலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி காண்பியுங்கள்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்வதற்கு உரிய நாளாக இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெரியவர்களை மதித்து நடப்பது நல்லது. தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். போக்குவரத்து தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூல பலன் உண்டு.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான வாய்ப்புகள் எல்லாம் கிடைக்கப் போகிறது. கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படுத்திக் கொள்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பால் உயரும் நாள் ஆக இருக்கும். ஆரோக்கியம் சீராகும்.