மருதானை தேவநம்பியதிஸ்ஸ மாவத்தையில் உள்ள இரண்டு வீடுகள் இன்று (18) தீக்கிரையாகியுள்ளன.
இரண்டு தீயணைப்பு வாகனங்களை அனுப்பி தீயை கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், இரண்டு வீடுகளின் தளபாடங்கள் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு வீட்டின் மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், காலையில் வேலைக்குச் செல்வதற்கு முன்பாக மின்விளக்குகளை எரிய விட்டு சென்றதால் தீ பரவியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.