இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் சுகாதார வழிமுறைகள் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன் படி இன்று முதல் டிசம்பர் இறுதி வரையிலான சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. புதிய சுகாதார வழிமுறைகளின் அடிப்படையில் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கையை 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய சுகாதார வழிகாட்டுதல்களின்படி, திருமணங்களில் மது வழங்குவதற்கான தடை இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது.