முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவின் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வழக்கின் சாட்சியாளராக தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மென்டிஸ் அழைக்கப்படமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அததெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
நாமல் பலல்லே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷாதீன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் இதனைத் தெரிவித்தார்.
இந்த வழக்கை ஜனவரி 18ஆம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.