மன்னார் – கோந்தைப்பிட்டி கடற்பரப்பில், நேற்று காணாமல் போன இரு மீனவர்களில் ஒருவர் , இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறையை சேர்ந்த தர்ஷன் (வயது-19) என்பவரே, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதேவேளை காணாமல்போன செந்தூரன்-(வயது-28) என்ற இரண்டு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தரை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (12) மதியம், மூன்று மீனவர்கள் கோந்தைப்பிட்டி கடலில், தமது படகை செலுத்தி தொழிலுக்குச் செல்ல சரி பார்த்தபோது மூன்று மீனவர்கள் உள்ளடங்களாக 8 பேர் படகில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.