மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் ஏறிக்கொள்ள எனக்கு பைத்தியம் பிடிக்கவில்லையென தெரிவித்த ஐக்கிய ரணில் விக்கிரமசிங்க, அடுத்த வருடமும் மிகவும் நெருக்கடியான வருடமாக இருக்கும் என்றும் கூறினார்.
பிரதமர் பதவியை, ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் வெளியான தகவலில் உண்மை எதுவும் இருக்கின்றதா? என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ரணிலிடம் கேட்டபோதே , ரணில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவை அரசாங்கத்துக்குள் இணைத்துக்கொண்டால், பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்ப முடியுமென்பது பலரது கருத்தாக இருக்கிறதென நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நாட்டில், தற்போது ஏற்பட்டிருக்கும் ஐக்கிய அமெரிக்க டொலர் பற்றாக்குறை, அடுத்தவருடம் ஜனவரி இறுதி வரையிலும் இருக்கும். பொருளாதாரமும் மிகவும் கடினமான நிலையில் நிற்கிறது என்றும் தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, அடுத்த வருடமும் மிகவும் கடினமான வருடமாக இருக்கும் என்றார்.