கண்ணீர் அஞ்சலி
அமரர் லோகநாதன் சுதாகரன்
பிறப்பு 02.10.1981 இறப்பு :08.12.2021
கோணாவில் கிளிநொச்சி
அமரர் லோகநாதன் சுதாகரன் அவர்கள் சுகயீன காரணமாக இறைவனடி சேர்ந்தார் அவர் முன்னாள் L.O.C பணியாளரும் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் சமூக சேவையாளருமாவார்.
இன்று சமூக சேவை என்று தங்களை வளர்த்துக்கொள்வதற்காக புலம் பெயர்ந்தவரை ஏமாற்றி வாழும் கலாச்சாரம் தலை தூக்கி நிக்கும் இவ் வேளையில் அமரர் லோகநாதன் சுதாகரன் அவர்கள் எம்மிடம் எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் எம்மோடு இணைந்து சமூகப் பானியாற்றியவர். அவர் எமக்காகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் தன்னுடைய பொன்னான நாட்களையும் நேரத்தினையும் செலவளித்திருக்கின்றார். அமரர் லோகநாதன் சுதாகரன் சிறந்த சமூகசேவையாளர் என உதவும் இதயங்கள் நிறுவனம் கெளரவிக்கின்றது.அமரர் லோகநாதன் சுதாகரன் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் அன்னாரின் ஆத்ம சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.