இந்திய பிரதமர் மோடி (Narendra Modi)மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ((Vladimir Putin ) இடையேயான உச்சி மாநாடு இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில் இதன்போது இரு நாடுகள் இடையேயான நல்லுறவுகள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) மற்றும் ரஷிய அதிபர் புதின் (Vladimir Putin ) பங்கேற்கும் இரு நாடுகள் இடையேயான 21-வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
இரு நாடுகள் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இரு நாடுகளின் பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறைகளுக்கு இடையேயான 2+2 பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர் கேய் லால்ரோவ் பாதுகாப்புத்துறை மந்திரி செர்கேய் ஷொய்கு நேற்று இரவு டெல்லி வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி, பாதுகாப்புத்துறை மந்திரியுடன் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதன்போது இந்தியா-ரஷியா இடையே ரூ.5,200 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ராணுவம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும் கூறப்படுகின்றது.
ரஷிய தயாரிப்பான நவீன ரக ஏ.கே.203 தானியங்கி துப்பாக்கிகளை இந்திய ராணுவத்துக்கு வாங்க ஒப்பந்தமிடப்பட்டது. அதன்படி 6 லட்சத்து ஆயிரத்து 427 ஏ.கே. 203 ரக துப்பாக்கிகளை இந்தியா வாங்குகிறது.
அதன்படி 2031 வரை 10 ஆண்டுகளுக்கு ரஷியாவிடம் இருந்து ஏ.கே.203 ரக துப்பாக்கிகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிகள் ரஷிய தொழில்நுட்ப உதவியுடன் அமேதியில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படும் அதேவேளை, இந்த பேச்சுவார்த்தையின்போது ஆப்கானிஸ்தான் விவகாரம், தீவிரவாத அச்சுறுத்தலுக்கான வாய்ப்பு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin ) இன்று பிற்பகலில் டெல்லி வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டிற்கு பின் பிரதமர் மோடியை (Narendra Modi) புதின் (Vladimir Putin ) சந்திக்க உள்ளார்.
மேலும் பிரதமர் மோடியுடன் சந்திப்புக்கு பிறகு இரவு புதின் (Vladimir Putin ) டெல்லியில் இருந்து ரஷிய புறப்பட்டு செல்லவுள்ளதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.