இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பலரின் இராஜினாமாவை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் அவர்கள் தங்களது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்திருந்தனர்.
எவ்வாறாயினும், அவர்களின் சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக இலங்கை முதலீட்டு சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது