உயிரிழந்த தனது கணவரின் கொலைக்கு நீதி வழங்கப்படவேண்டும் என சியால்கோட்டில் கொல்லப்பட்ட இலங்கை பொறியியலாளர் பிரியந்த குமாரவின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்தோடு, தனது கணவரின் மரணம் குறித்து பாகிஸ்தான் இலங்கை அரசாங்கங்கள் நேர்மையான முறையில் விசாரணையை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் செய்திகள் மூலமே அவர் கொடூரமான விதத்தில் கொல்லப்பட்டதை தாங்கள் அறிந்ததாகவும், அதன் பின்னர் இணையத்திலும் சம்பவம் குறித்து பார்த்ததாக என பிரியந்த குமாரவின் மனைவி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் மிகவும் அமைதியான மனிதர் என தெரிவித்த பிரியந்த குமாரவின் மனைவி, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதன் மூலம் தனது கணவருக்கும் தனது இரு பிள்ளைகளிற்கும் நீதியை வழங்குமாறு இரு நாடுகளினதும் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்