இலங்கைக்கு வருகை தந்துள்ள் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலின் எரிவாயு சிலிண்டர்களை ஆய்வுக்குட்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (03) இரவு 9.30 மணியளவில் கப்பலுக்குச் சென்று ஆய்வுகளை ஆரம்பித்ததாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, அதன் மாதிரிகள் நுகர்வோர் அதிகாரசபையின் ஆய்வகங்களில் பரிசோதிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
எரிவாயு தொடர்பில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளதுடன், நாட்டிற்கு கொண்டுவரப்படும் அனைத்து எரிவாயுக்களையும் ஆய்வுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட எரிவாயு மாதிரிகளை தொடர்ந்தும் ஆய்வுக்குட்படுத்தி வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அங்கீகார சபையினால் இந்த ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.