திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் எட்டு சந்தேக நபர்களை இன்று (3) அதிகாலையில் கைது செய்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தோப்பூர், கந்தளாய் மற்றும் ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த 45 முதல் 65 வயதுக்குட்பட்ட 8 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் வெருகல், மாவடிச்சேனை பகுதியில் வீடு ஒன்றில் புதையல் தோண்டிய போதே வெருகல் பகுதியிலுள்ள இராணுவ புலனாய்வு பகுதியினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து எட்டு சந்தேக நபர்களை கைது செய்து ஈச்சிலம்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களிடமிருந்து மண்வெட்டி 2, அலவாங்கு1, சவல்2, கேன் போத்தல்1, தாச்சு1, பிக்காசு1, பானை1 மற்றும் மோட்டார் சைக்கிள் 2 போன்றவற்றினையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.