வலிகாமம் கிழக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் சுப்பிரமணியம் சிவபாலன் (வயது 51) என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.
சாவகச்சேரி தனங்கிளப்பு அறுகுவெளியில் வீடு ஒன்றிலிருந்து வெளிநாட்டவர் ஒருவருடைய தென்னம் காணியை குத்தகைக்கு எடுத்து பராமரித்த வேளை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டில் நடமாட்டமில்லாததை அவதானித்த அயல்வீட்டுக்காரர் வீட்டை எட்டிப் பார்த்த பொழுது துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனையடுத்து உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.