மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகளை அடைய கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்களை நம்பி எந்த ஒரு விஷயத்தையும் ஒப்படைப்பதற்கு முன்னர் ஆலோசிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களிடம் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். குடும்பத்துடன் நேரத்தை செலவிட கூடிய வாய்ப்புகளும் அமையும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திட்டங்களுக்கு ஏற்ப சூழ்நிலையில் சரியாக அமையும் என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் லாப நஷ்டத்தை பற்றி கவலையை மேலும் காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்ப போகிறது. ஆரோக்கியம் சீராகும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத் தேவைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்வதில் மகிழ்ச்சி கொள்வீர்கள். பொருளாதாரம் ஏற்றம் காணும் என்பதால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக் கூடிய அற்புத வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் தொல்லையிலிருந்து விடுதலை பெறுவீர்கள்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் எழுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்ததை விட லாபம் குறைவாக இருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் திறமையை வெளிப்படுத்த கூடிய நல்ல நாளாக இருக்கும். தேவையற்ற விமர்சனங்களை உதறித் தள்ளுவது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீண்ட நாளாக சந்திக்காத நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உறவினர்கள் மூலம் ஆதாயம் காரணம் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியிட பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் அமையும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனைவியுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்காத சில இடங்களில் இருந்து வரவேண்டிய தொகை கால தாமதமாக வந்து சேரலாம். வெளியிட பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. பெண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி அடைய கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் தீர்க்கமாக முடிவு எடுப்பது நல்லது. சுயதொழிலில் தனலாபம் பெருகும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் செய்யலாமா? வேண்டாமா? என்கிற குழப்பத்துடன் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருப்பது உத்தமம். ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மற்றவர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் தீர கூடிய நாளாக அமைய இருக்கிறது. தேவையற்ற ஈகோவை தவிர்த்து நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வதில் கெட்டுப்போவது இல்லை. சுய தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நிகழலாம். உத்தியோகத்திலிருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து பணியில் மும்முரமாக இருப்பது நல்லது.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காணும் யோகம் உண்டு. கணவன் மனைவியிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்களை ஊக்கப்படுத்தி வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி இருக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் மூலம் சிறப்பான பலன்கள் உண்டாக வாய்ப்புகள் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய சரக்குகள் தேங்கி நிற்காமல் விற்பனையாகி விடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் பெருகும். வெளியூர் மற்றும் வெளிநாடு போன்ற விஷயங்களில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற விமர்சனங்கள் எழும். எதையும் பொருட்படுத்தாமல் நேர்மையாக நடப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடன் தொகை குறையும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களிடம் இருந்த நல்ல திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் நீண்டநாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்க பெறுவீர்கள். கணவன் மனைவியிடையே இருந்த ஒற்றுமை மேலும் வலுவாகும். மூன்றாம் நபர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.