பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஹேவா லுனுவிலகே லசந்த, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
இன்று(26) அதிகாலை களுத்துறை, தியகம பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் 2 பொலிஸார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலியான நபர் ஷன்சைன் சுத்தாவின் கொலை உள்ளிட்ட மேலும் பல படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.