இரத்தினபுரி, ரக்குவானை பொலிஸ் நிலையத்தின் 28 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக கொடகவெல ரக்குவானை பொது சுகாதார பரிசோதகர் எஸ் எஸ்.முனவீர தெரிவித்துள்ளார்.
ரக்குவானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR மற்றும் என்டிஜன் பரிசோதனைகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் சிறு குற்ற முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொலிஸ் நிலையத்தின் வழமையான கடமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.