2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான பாராளுமன்ற விவாதம் இன்று (13) ஆரம்பமாகவுள்ளது.
இன்று காலை 09.00 மணிக்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இம்மாதம் 22ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு நடைபெறும் என பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 22ஆம் திகதி மாலை 05.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 10ஆம் திகதி வரை 16 நாட்கள் நடைபெறும்.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 10 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு நடைபெறும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததை குறிப்பிடத்தக்கது.