சிறுவர்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடக்கப்பட்ட காரணத்தினால் சில மனநோய் நிலமைகளுக்கு உள்ளாகும் நிலை அதிகரித்துள்ளதாக ரிஜ்வோ வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் வீடுகளுக்கு சிறுவர்களுக்கு உகந்த சூழல் ஒன்றை ஏற்படுத்த பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு மனநிலைகளில் இருந்து சிறுவர்களை பாதுகாக்க அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவது அத்தியவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.