ரம்புக்கன, தொபேமட பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கிய மூவரின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், அவருடைய 8 வயதுடைய மகள் மற்றும் 14 வயதுடைய உறவுக்கார சிறுமியின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்சரிவில் சிக்கிக் கொண்ட தந்தை மீட்கப்பட்டு கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.