மக்கள் விடுதலை முன்ணணியின் ஊரிலிருந்து தொடங்குவோம் என்ற தொனிப்பொருளிலான மக்களுடானான உரையாடலும் துண்டுபிரசுர விநியோகமும் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.
இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பித்த நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்னாயக்க, அக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டதுடன் ஆட்சி மாற்றத்தின் அவசியம் தொடர்பாகவும் வலியுறுத்தப்பட்டது.
இந்த செயற்றிட்டமானது மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமங்களிலும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.