இரசாயன பசளைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால் நாட்டில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கிடைக்கும் மரக்கறிகளின் தொகை குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை பேலியகொடை மெனிங் காய்கறி சந்தைக்கு கிடைக்கும் மரக்கறிகளின் தொகையானது 60 வீதமாக குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.
சந்தைக்கு கிடைக்கும் மரக்கறிகளின் தொகையானது எதிர்வரும் நாட்களில் குறைந்தால், தட்டுப்பாடு ஏற்பட்டு, மரக்கறிகளை கொள்வனவு செய்யவும் மக்கள் வரிசைகளில் நிற்கும் நிலைமை ஏற்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சந்தைக்கு கிடைக்கும் மரக்கறிகளின் தொகை குறைந்துள்ளதால், அவற்றின் மொத்த விற்பனை விலைகளும் அதிகரித்துள்ளதாக மெனிங் சந்தை பொது வர்த்தக சங்கத்தின் தலைவர் எச்.எம்.உபசேன தெரிவித்துள்ளார்.
மரக்கறிகளை கொள்வனவு செய்யவும் மக்கள் வரிசைகளில் நிற்கும் நிலைமை ஏற்படும்..
No Comments1 Min Read

