இந்து மத ஸ்தலங்களில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்கின்ற பொழுது பௌத்த எச்சங்கள் அடையாளம் காணப்படுவதாலேயே இங்கு சிக்கல் நிலை ஏற்படுகின்றது என தொல்பியல் திணைக்கள பொது முகாமையாளர் அனுர மனதுங்க தெரிவிக்கின்றார்.
கிளிநொச்சி பூநகரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடக்கு கிழக்கில் உள்ள தொல்பியல் சின்னங்களை திட்டமிட்டு அழிக்கப்படுவதாக மக்கள் மத்தியில் கருத்து நிலவுகின்றது. இது தொடர்பில் என்ன கூறுகின்றீர்கள் என அவரிடம் வினவியபொழுது, இவ்விடயம் தொடர்பில் தொல்பியல் திணைக்கள பொது முகாமையாளர் அனுர மனதுங்கவை பதிலளிக்குமாறு அமைச்சர் பணித்தார்.
அவர் கருத்து தெரிவிக்கையில், புராதான சின்னங்கள் தொடர்பில் பாதுகாக்கவும், அது தொடர்பில் ஆராய்ச்சி செய்வதற்குமே எமது திணைக்களம் இருக்கின்றது. எவ்வாறான இடங்களில் புராதன சின்னங்கள் உள்ளன என்பதை அவ்வந்த இடங்களிற்கும், சமயங்களிற்கும், தொல்பியல்கள் தொடர்பிலேயே ஆராயப்படும்.
ஆனால் இங்கு ஒரு சிக்கல் நிலை ஏற்படுகின்றது. இந்து வணக்கஸ்தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்ற பொழுது பௌத்த சின்னங்களை அங்கு அவதானிக்க முடிகின்றது.
அவ்வாறான இடங்களில் புதிதாக விடயங்களை திணிப்பதாக தவறான நிலைப்பாடு ஒன்று உள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களமானதுயமானது அனைத்து சமயங்களிற்கும் மதிப்பளித்து செயற்படுத் திணைக்களமாகும்.
பொதுமக்கள் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளது என்பது தொடர்பில் தமக்கு அறியத்தந்தால், அவ்வாறு பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பில் ஆராய்ந்து சீர் செய்வதற்கு முடியும். நாங்கள் அனைத்து மதங்களையும் மதித்து அவ்வந்த சமய தொல்பொருள் சின்னங்களை ஆராய்ந்து பொது மக்களிற்காகவே சேவை செய்கின்றோம் என அவர் தெரிவித்தார்.