மிகவும் சூட்சுமமான முறையில் பாதணி ஜோடிக்குள் கையடக்கத் தொலைபேசிகள் நான்கை மறைத்து வைத்துக்கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கையடக்கத் தொலைபேசிகளை களுத்துறை சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்ல முயன்ற கைதியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
கைதான சந்தேகநபர், கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், பாணந்துறை நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இனங்காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து கைதியை களுத்துறை சிறைச்சாலைக்கு அழைத்துச்சென்று சோதனைக்கு உட்படுத்திய போதே, அவர் அணிந்திருந்த இரண்டு பாதணிக்குள்ளிருந்து தலா இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.