பொலிஸார் மூவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 18 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த தினம் பொரளை பகுதியில் கடமையில் இருந்த மூன்று போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகி இருந்தது.
இதன்போது, காயமடைந்த மூன்று பொலிஸ் அதிகாரிகளும் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வந்த விசாரணைகளுக்கு அமைய 18 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.