அனைத்து பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
கொவிட் வைரஸ் தொற்று நிலை முழுமையாக நீங்கவில்லை. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக முக்கியத்துவம் செலுத்துவது அவசியமாகும்.
பிள்ளைகளுக்கு ஏதாவது சுகயீனம் இருக்குமாயின், அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு, பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளது,
இதேவேளை , சிறுவர்களுக்கான உணவுகளை வீட்டிலேயே தயாரித்து வழங்குமாறு பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள சிறுவர்களின் போக்குவரத்தை கருத்திற் கொண்டு, போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்க தயாராக உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளை விட்டு வீட்டிற்கு வந்தவுடனேயே, குளித்தல் அவசியமாகும். அவ்வாறே ஆடைகளையும் உடனடியாக சுத்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அரசாங்க மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தற்சமயம் சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று 9,100 க்கும் அதிகமான பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதேவேளை, இன்று தாம் சேவைக்கு சமூகமளிக்க இருப்பதாக அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இன்று முதல் தமது ´கற்பித்தல் செயற்பாடுகள்´ முறையாக இடம்பெறும் என ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.