நாடாளுமன்றத்தில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் (22) இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற கூட்டத்தில் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள உர பிரச்சினைக்கு தீர்வு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதேவேளை நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தமிழ் உறுப்பினர்கள் கையில் பதாகைகளை ஏந்திய எதிர்ப்பினை வெளிப்படுத்தும் புகைப்படங்களில் சமூக ஊடகங்களில் தற்சமயம் வெளி வந்துள்ளன.
இதில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையில் வைத்திருந்த பதாகையில் ”நாட்டுக்கு பட்டினி விவசாயிகள்” அழிவு என்ற வசனங்களுக்கு பதிலாக ”நாட்க்கு பட்டினி விவசாயிகள் அழிவு” என வசனங்கள் எழுதப்பட்டிருந்தது.
இதனை சமூகவலைதளத்தில் பார்த்த நெட்டிசன்கள் நமது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் தமிழ் ஆளுமை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது என கிண்டலடித்து வருகின்றனர்.