பிரதமர் போல வேடமிட்டு வந்த நபரை மக்கள் அடித்து விரட்டிய சம்பவம் ஒன்று அநுராதபுரம் பிரேதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம் – ரம்பேவ பிரேதேசத்தில் இடம்பெற்ற விவசாயிலின் போராட்டத்திற்கு நபர் ஒருவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போன்று வேடமிட்டு வந்த நபரை பொது மக்கள் அடித்து விரட்டியுள்ளனர்.
மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை தாக்கியதுடன் அரசிற்கு எதிரான தங்கள் ஆதங்கத்தையும் வெளிக்காட்டியதாக கூறப்படுகின்றது.
இதேவேளை பிரதமர் மகிந்தபோல வேடமணிந்து வந்தவரின் இந்த நடவடிக்கையானது அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.