வசூலில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு அடுத்த இடத்தில் டாக்டர் படம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர். குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்கள் டாக்டர் படத்தை பார்த்து வருவதால் முதல் இரண்டு நாட்களிலேயே ரூ.16 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
முதல் வாரம் நல்ல வசூலைப் பெற்ற இந்தத் திரைப்படம் இரண்டாவது வாரமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சுந்தர்.சியின் அரண்மனை 3 திரைப்படம் வெளியாகியிருந்தாலும், டாக்டர் திரைப்படத்தின் வசூலைப் பாதிக்கவில்லை.
இந்த நிலையில் டாக்டர் திரைப்படம் வசூலில் நடிகர் விஜய்யின் மாஸ்டருக்கு அடுத்த இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த வாரமும் பெரிய படங்கள் வெளியாகாததால் டாக்டர் படத்தின் வசூல் வேட்டை 3வது வாரமும் தொடரும் என்று கூறப்படுகிறது. அப்படித் தொடர்ந்தால் மாஸ்டர் படத்தின் வசூலை முறியடிக்க வாய்ப்பிருக்கிறது.