நாட்டில் அரை ஏக்கருக்கு அதிகமான நிலத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட 3 இலட்சம் ரூபா உதவித் திட்டம் ஒன்றை வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.
கம்பளை பகுதியில் விசாயிகளுக்கு விவசாய பொருட்களை வழங்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவில் இருந்து சுற்றுசூழலுக்கு ஏற்ற விவசாய நடவடிக்கைகளுக்காக நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய 22 இலட்சம் லீட்டர் விஷேட திரவ உரத்தை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இந்நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதி குறித்த உரத் தொகையின் முதல் தொகுதியை நாட்டிற்கு எடுத்துவரப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருதாக தெரிவித்துள்ளார்.