லிட்ரோ நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,675 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 30 ரூபாவாலும், 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 14 ரூபாவாலும் குறைக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை புதிய விலை 1,071 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 506 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.