உலக சினிமாவையே கடலுக்குள் காதலர்களாக மாற்றி கட்டியிழுத்த படம் தான் ‘டைட்டானிக்’. 1997ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலக காதலர்களின் சின்னமாக கூட மாறியது.
மேலும் இதற்காக ஆஸ்கர் விருதுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து மீண்டும் ஒட்டுமொத்த உலக மக்களையும் ‘இப்படி ஒரு உலகம் இருக்குமோ’ என்று எண்ணவைத்த அற்புத படைப்பு தான் அவதார்.
இந்த படமானது கடந்த 2009ம் ஆண்டு வெளியானது. ஒட்டுமொத்த உலக வசூலிலும் சாக்கைப்போடு போட்டது. இந்த படைப்பிற்கெல்லாம் சொந்தக்காரர் தான் ஜேம்ஸ் கேமரூன்.
அவத்தாருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து ஜேம்ஸ் கேமரூன் அந்த படத்தின் அடுத்தடுத்து பாகங்களை எடுக்க திட்டமிட்டார். அதுவும் முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாவது பாகமானது மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது அவதார் மொத்தம் 5 பாகங்களாக உருவாகவுள்ளதாகவும். அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் திகதி மற்றும் ஆண்டுகள் ஆகியவை துல்லியமாக வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவதார் மூன்றாம் பாகம் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதியும், நான்காம் பாகம் 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதியும், ஐந்தாம் பாகம் 2028 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதியும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது ராசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.