நாட்டை ஆட்சி செய்வது அமைச்சரவையா அல்லது அரிசி ஆலை உரிமையாளர்களா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, நாட்டினை யார் தான் ஆட்சி செய்கின்றனர் என அரசாங்கத்தை நேரடியாக கேட்கிறேன். இந்த கேள்வி ஏல முதல் கரணம் அரிசி ஆலை உரிமையாளர்கள் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி அரிசி விலை தொடர்பில் நாட்டுக்கு அறிவிப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக அரசாங்கம் எந்த கருது தெரிவிக்காமல் இருந்து வருகிறது.
இந்த சூழல் காரணமாக நாட்டை நிர்வகிப்பது யார் என்ற கேள்வியை மக்கள் கேட்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு அரசாங்கம் தான் உரிய பதில் அளிக்க வேண்டும்.
இதனிடையே பேசிய சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன கூறியதாவது,
முன்னாள் பிரதமரின் கேள்வியானது சபை சம்பிரதாயத்துக்கு எதிராக உள்ளது என்றும். இதுபோன்ற கேள்விகளுக்கு தற்போது பதிலளிக்க இயலாது என்றும் தெரிவித்தார்