சிறுவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைக்காக விசேட நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிக்க தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் சிறுவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை விரைவு படுத்த எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
சிறுவர்கள் தொடர்பிலான பல சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.