இலங்கையில் இன்று ஊரடங்கு கட்டுபாடுகள் நீக்கப்பட்ட நிலையில் நகைப்பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
யாழில் தங்கச் சந்தை நிலவரப்படி தங்கத்தின் விலையில் சரிவு கண்டுள்ளதாக தங்க இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் இன்றைய நிலவரப்படி 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 17ஆயிரத்து 500ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த காலத்தில் 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 23ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.
இதேவேளை 22 கரட் தங்கத்தின் விலை 1இலட்சத்து 7ஆயிரத்து 700ரூபாவாக விற்பனை செய்யப்படதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இன்னும் சில நாட்கள் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படும் என தங்க இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.