பெரும் போகத்திற்கான சேதன உரம் மற்றும் இயற்கைக் கனிமங்கள் மற்றும் தாவர ஊட்டற் பதார்த்தங்களை இறக்குமதி செய்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, நெற்செய்கைக்குத் தேவையான சேதன உரம் அரச உரக்கம்பனியால் இறக்குமதி செய்வதற்கும், ஏனைய பயிர்களுக்கு அனுமதிப்பத்திரம் கொண்ட உரக்கம்பனிகளால் தேவையான சேதன உரங்களை இறக்குமதி செய்து போட்டி விலைமனுக் கோரலின் அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏனைய பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்குத் தேவையான சேதன உரத்தை தாமதமின்றி போட்டி விலையின் கீழ் விநியோகிப்பதற்கு இயலுமான வகையில் இரண்டு அரச உரக்கம்பனிகள் மூலம் ஏனைய பயிர்களுக்குத் தேவையான சேதன உரத்தை இறக்கமதி செய்ய இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.