உரிய காலத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அவ்வாறு தேர்தலை நடத்தினால் தான் அரசாங்கத்தின் மீத மக்கள் வைத்துள்ள அபிப்பிராயத்தை அறிந்துகொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அம்பாறை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.