பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் 2021.09.22 அன்று மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போது, கருப்பு உடை பாதுகாப்பு பிரிவினர் சகிதம் பொலிஸ் பாதுகாப்பு படையுடன் மன்னார் சென்ற ஞானசார தேரருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கியுள்ளனர், சாதாரணமான ஒரு தேரரிற்கு அதிக பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் மன்னார் வந்த ஞானசாரதேரரை இடைவழியில் வழிமறித்த விவசாயிகள் தங்களின் காணிப்பிரச்சினையை தீர்த்து தருமாறு கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் கோயில்மோட்டை வயல் காணிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஞானசார தேரர், தேவாலயங்களுக்கு காணிகளை வழங்குவதைவிட மக்களின் பசியை தீர்ப்பதே முக்கியம் என தெரிவித்ததுடன், குறித்த காணியை கோயில் மோட்டை விவசாயிகளுக்கு பெற்றுத்தர தன்னால் ஆன நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.