எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல் தரம் 5 மற்றும் அதற்கு கீழ் உள்ள 200 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட ஆரம்ப பிரிவு பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு கல்வி அமைச்சு நம்புவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து சுகாதார அமைச்சு ஏற்கனவே சுகாதார வழிகாட்டுதல்களை சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். “கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன் பாடசாலை சூழலை சுத்தம் செய்ய துப்புரவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ” என்று அவர் கூறினார்.
தூய்மைப் பணி முடிந்ததும் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான அமைப்பை அமைச்சு உருவாக்கியுள்ளது என்றார். அனைத்து பாடசாலைகளையும் சுத்தம் செய்ய குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும் என்று பேராசிரியர் பெரேரா குறிப்பிட்டார்.